ஜார்க்கண்ட்டில் முதல்வர் ரகுபர் தாஸின் கால்களை 2 பெண்கள் கழுவியதால் சர்ச்சை - வீடியோ இணைப்பு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் குரு பூர்ணிமா பூஜையின் போது முதலமைச்சர் ரகுபர் தாஸின் கால்களை இரண்டு பெண்கள் கழுவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
ஜார்க்கண்ட்டில் முதல்வர் ரகுபர் தாஸின் கால்களை 2 பெண்கள் கழுவியதால் சர்ச்சை - வீடியோ இணைப்பு
Published on

டேராடூன்:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நேற்று குரு பூர்ணிமா பூஜை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனிடையே, ஜாம்ஜெத்பூரில் உள்ள பிரம்மா லோக் தாம் பகுதியில் நடைபெற்ற குரு பூர்ணிமா பூஜையில் முதலமைச்சர் ரகுபர் தாஸ் கலந்து கொண்டார். 

இந்த நிகழ்ச்சியில், ரகுபர் தாஸின் கால்களை இரண்டு பெண்கள் கழுவி உள்ளே வரவேற்றனர். இரண்டு பெண்கள் கீழே அமர்ந்து கொண்டு முதல்வர் ரகுபர் தாஸின் பாதங்களில் தண்ணீரை உற்றினர். ரகுபர் தாஸின் பாதம் பெரிய தட்டில் இருந்தது. பிராத்தனை செய்து கொண்டே அந்த பெண்கள் பூக்கள் அடங்கிய தண்ணீரை ஊற்றினர்.

பின்னர், முதல்வரின் கால்களை பெண்கள் கழுவியதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவத்தை பெண்கள் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் விமர்சித்துள்ளனர்.

பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பிரிந்தா அதிஜ் கூறுகையில், “இது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதேபோல் இந்த நடைமுறை ஒரு முதல்வருக்கு தகுந்தது அல்ல” என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com