தெப்பக்குளம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு

தெப்பக்குளம் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகையை மர்ம மனிதர்கள் பறித்துச் சென்றனர்.
தெப்பக்குளம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு
Published on

மதுரை:

மதுரை மேல அனுப்பானடி நாகம்மாள் கோவில் சந்து பகுதியைச் சேர்ந்தவர் அரிகரன் (வயது 33). இவர் நேற்று இரவு மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

கேட்லாக் ரோடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே சென்ற போது பின்னால் ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர்.

அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் அரிகரனின் மனைவி கழுத்தில் கிடந்த நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அரிகரன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை விரட்டிச் சென்றார். ஆனால் அவரது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

இது குறித்து தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். அதில், 7 பவுன் நகையினை பறித்துச் சென்றுவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com