தர்மபுரி அருகே ஆசிரியையிடம் நகை பறிப்பு

தர்மபுரி அருகே நடந்த சென்ற ஆசிரியையிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் நகையை பறித்து சென்றனர்.
தர்மபுரி அருகே ஆசிரியையிடம் நகை பறிப்பு
Published on

தர்மபுரி:

தர்மபுரியை  அடுத்த வெண்ணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அசோக். இவரது மனைவி சித்ரா (வயது 27). இவர் தர்மபுரியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். 

நேற்று மாலை பள்ளி முடிந்து ஷேர் ஆட்டோவில் வெண்ணாம்பட்டி வந்தார். பின்னர் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ஆசிரியை சித்ரா கழுத்தில் இருந்த 2 செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். 

இது குறித்த புகாரின் பேரில் தர்மபுரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com