கே.கே.நகரில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது

கே.கே.நகரில் சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

போரூர்:

சென்னை கே.கே.நகர் 17-வது செக்டர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி லதா. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

நேற்று லதா அலுவலகம் சென்றுவிட்டு இரவு 8.30மணி அளவில் பஸ்சில் வந்து இறங்கினார். வீட்டிற்கு செல்வதற்காக ராஜமன்னார் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2வாலிபர்கள் லதா அணிந்திருந்த தாலி செயினை பறித்தனர் அதிர்ச்சி அடைந்த லதா கொள்ளையர்களை தடுத்து நிறுத்தி கூச்சலிட்டார்.

உடனே 2 பேரும் தப்பி ஓடினர் அக்கம்பக்கம் உள்ளவர்கள் விரட்டியதில் ஒருவன் மட்டும் கீழே விழுந்து சிக்கிக்கொண்டான் அவனுக்கு தர்ம அடி கொடுத்து கே.கே. நகர் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் செயின் பறிப்பில் ஈடுபட்டது ஆயிரம்விளக்கு பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பது தெரிந்தது. அவனிடமிருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய தினேஷின் கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com