வக்கீல் வீட்டில் நகை திருடிய வேலைக்காரி கைது

புதுவையில் வக்கீல் வீட்டில் 4 பவுன் தங்க சங்கிலியை திருடிய வேலைக்காரி கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

புதுச்சேரி:

புதுவை லப்போர்த் வீதியை சேர்ந்தவர் மோகன் கீர்த்தி குமார். வக்கீல். சம்பவத்தன்று இவரது மனைவி குளிக்க செல்லும் முன்பு தனது 4 பவுன் தங்க சங்கிலியை கழற்றி படுக்கையறையில் வைத்துவிட்டு சென்றார். திரும்ப வந்து பார்த்த போது தங்க சங்கிலி காணாமல் போயிருந்தது.

வீட்டில் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் மோகன் கீர்த்திகுமார் ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வீட்டில் வைத்திருந்த பொருளை வெளியாட்கள் யாரும் வந்து திருடிச்செல்ல வாய்ப்பு இல்லை என்பதால் வீட்டில் வேலை செய்பவர்கள் மற்றும் அன்றைய தினம் வீட்டிற்கு வந்து சென்றவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது வீட்டு வேலை செய்யும் அரியாங்குப்பம் சுப்பையா நகரை சேர்ந்த நமேஷா பேகம் என்ற நிஷா முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனையடுத்து அவரை தனியாக அழைத்து சென்று போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தங்க சங்கிலியை திருடியதை ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து நமேஷா பேகத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 4 பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com