கோட்டாரில் கூலி தொழிலாளி வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை

கோட்டாரில் கூலி தொழிலாளி வீட்டின் கதவை உடைத்து ஒரு பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் கோட்டார் சரக்கல்விளை பகுதியை சேர்ந்தவர் நாராயணபூபதி (வயது 34). கூலி தொழிலாளி.

இவர் குடும்பத்தோடு வடலிவிளையில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றிருந்தார். நேற்று வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த நாராயணபூபதி உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த ஒரு பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கப்பணம் திருடப்பட்டிருந்தது.

மேலும் வீட்டில் இருந்து லேப்டாப்பையும் மர்மநபர்கள் திருடிச் சென்றிருந்தனர். இதுகுறித்து நாராயணபூபதி கோட்டார் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிராவின் காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com