மதுரையில் மின் வாரிய அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை

மின்வாரிய அதிகாரி வீடு உள்பட 2 வீடுகளில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொள்ளை
கொள்ளை
Published on

மதுரை:

மதுரை ஆனையூர் ராமலிங்கா நகரைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 46). இவர், கே.புதூர் மின் வாரிய அலுவலகத்தில் உதவி தணிக்கை அதிகாரியாக உள்ளார். இவர் நேற்று இரவு குடும்பத்தினருடன் வீட்டின் முதல் மாடியில் படுத்து உறங்கினார். இதனை அறிந்த மர்ம மனிதர்கள் இன்று அதிகாலை வீட்டின் கீழ்த்தள கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

அவர்கள் பீரோவில் இருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். காலையில் கண் விழித்து கீழே இறங்கியவர்கள் பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்துது கூடல் புதூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் ஆனையூர் மலர் நகரைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது வீட்டின் கதவு இரவில் பூட்டப்படாமல் இருந்துள்ளது. இதனை பயன்படுத்தி மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்தனர்.

அவர்கள் பீரோவில் இருந்த ஒரு பவுன் மோதிரம், 1 ஜோடி வெள்ளிக் கொலுசு மற்றும் ரூ.5 ஆயிரத்தை திருடிச் சென்று விட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com