கோவையில் முன்னாள் கவுன்சிலர்- சப்-இன்ஸ்பெக்டர் மகளிடம் நகை பறிப்பு

கோவையில் நடைபயிற்சி சென்ற முன்னாள் கவுன்சிலரிடம் ஹெல்மெட் அணிந்த வந்த வாலிபர் நகையை பறித்து சென்றனர்.
கோவையில் முன்னாள் கவுன்சிலர்- சப்-இன்ஸ்பெக்டர் மகளிடம் நகை பறிப்பு
Published on

கோவை:

கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 44). 75-வது வார்டு அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர். இவர் நாள்தோறும் நஞ்சுண்டாபுரம்- ராமநாதபுரம் வழியே நடைபயிற்சி செல்வது வழக்கம்.

சம்பவத்தன்று அதிகாலை நஞ்சுண்டாபுரத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு நடைபயிற்சிக்கு சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த வாலிபர் திடீரென சந்திரசேகரன் கழுத்தில் அணிந்திருந்த 5ž பவுன் நகையை பறித்தார்.

அதிர்ச்சியடைந்த அவர் சத்தம்போட்டு கொள்ளையனை மடக்கிப்பிடிக்க பின் தொடர்ந்தார். அக்கம் பக்கத்தினரும் உதவிக்கு வந்தனர். எனினும் கொள்ளையன் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டார். இது குறித்து அவர் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்கள்.

கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகம் சப்-இன்ஸ்பெக்டர்கள் குடியிருப்பில் வசித்து வருபவர் சப்-இன்ஸ்பெக்டர் கோமதி. இவரது மகள் ஷில்பா ஸ்ரீ (24). சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

சம்பவத்தன்று கோவை வந்த அவர் கோவை மணீஸ் ஸ்கூல் பஸ் நிலையத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு பஸ்சில் சென்றார். ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் இறங்கிய போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை காணவில்லை.

கூட்டத்தை பயன்படுத்தி மர்ம நபர் பஸ்சில் நகையை பறித்தது தெரியவந்தது. இது குறித்து அவர் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com