அறந்தாங்கி அருகே மூதாட்டியிடம் நகை பறிக்க முயற்சி

அறந்தாங்கி அருகே கடையில் இருந்த மூதாட்டியிடம் நகையை பறிக்க முயன்ற 3 பேரில் ஒருவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
நகை பறிக்க முயற்சி
நகை பறிக்க முயற்சி
Published on

அறந்தாங்கி:

அறந்தாங்கி அருகே வல்லவாரி கிராமத்தைச் சேர்ந்தவர் சரோஜா(வயது 60) . இவர் அப்பகுதியில் பெட்டிகடை நடத்தி வருகிறார். நேற்று மாலை அவர் கடையில் இருந்த போது அங்கு வந்த 3 பேர் சரோஜா கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்க செயினை பறிக்க முயன்றனர். 

உடனே சரோஜா கூச்சலிட்டதும் அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்களை பார்த்த 3 பேரும் தப்பி ஓடினர். பொதுமக்கள் விரட்டி சென்று பிடித்ததில் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரைச் சேர்ந்த தமிழன் என்பது தெரியவந்தது. 

மற்ற இருவர் தப்பினர். பிடிபட்டவனை அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com