அவினாசி அருகே பனியன் தொழிலாளி வீட்டில் 25 பவுன் நகை-பணம் கொள்ளை

அவினாசி அருகே பனியன் தொழிலாளி வீட்டில் 25 பவுன் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவினாசி அருகே பனியன் தொழிலாளி வீட்டில் 25 பவுன் நகை-பணம் கொள்ளை
Published on

அவினாசி:

நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் வெள்ளத்துரை. இவர் தனது மனைவி மாதவியுடன் அவினாசி அருகே உள்ள ஏ.வி.டி லே அவுட் எக்ஸ்டன்சன் பகுதியில் தங்கி உள்ளார். அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வெள்ளத்துரை வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் தனது சொந்த ஊரான நெல்லைக்கு சென்று விட்டார். அவரது மனைவி மாதவி உறவினர் வீட்டிற்கு சென்றார்.

வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டு இருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். இன்று காலை வீட்டிற்கு திரும்பிய மாதவி நகை-பணம் கொள்ளை போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவினாசி போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com