வங்கி அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை

வளசரவாக்கத்தில் வங்கி அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகை கொள்ளை
நகை கொள்ளை
Published on

போரூர்:

வளசரவாக்கம் மேற்கு காமகோடி நகரை சேர்ந்தவர் சந்திரன். ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி.

கடந்த 23-ந் தேதி அவர் வீட்டை பூட்டிவிட்டு சாமி தரிசனம் செய்வதற்காக குடும்பத்துடன் திருப்பதி சென்றார். நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் சந்திரன் வீடு திரும்பியபோது கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது படுக்கை அறை பீரோவில் வைத்து இருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ. 30ஆயிரம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. முன்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் நகை பணத்தை சுருட்டி சென்றுள்ளனர்.

இதுகுறித்து வளசரவாக்கம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com