ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் துணை சிஇஓ திடீர் ராஜினாமா

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் துணை சிஇஓ அமித் அகர்வால் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் துணை சிஇஓ திடீர் ராஜினாமா
Published on

புதுடெல்லி:

விமான போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனங்கள் குதித்த பின்னர் போட்டி மனப்பான்மையில் பயணிகளுக்கு ஆதரவாக சில நிறுவனங்கள் கட்டணங்களை குறைத்தும், சிறப்பு சலுகைகளை அறிவித்தும் வாடிக்கையாளர்களை முன்னர் கவர்ந்திழுத்தன.

இந்த தொழில் போட்டியில் கிங் பிஷர் உள்ளிட்ட சில நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்தன. அவ்வகையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

போதிய பணப்புழக்கம் இல்லாததால் அந்நிறுவனத்தின் விமானிகள், பொறியாளர்கள் மற்றும் பணிப்பெண்களுக்கான மாத சம்பளத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது.

பணப்பற்றாக்குறையால் சிக்கித் தவித்து வரும் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம்,அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்துள்ளது.

இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் துணை சிஇஓ அமித் அகர்வால் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது சொந்த காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com