காஷ்மீர்: போலீசார் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதி கைது
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தில் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முஹம்மத் இயக்க பயங்கரவாதியிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் இன்று நடத்திய தேடுதல் வேட்டையில் ஜெய்ஷ்-இ-முஹம்மத் இயக்கத்தை சேர்ந்த ஒரு பயங்கரவாதி கைது செய்யப்பட்டான். அவன் வைத்திருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.