இமாசலப்பிரதேசத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி

இமாசலப்பிரதேசத்தில் பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர். மேலும் 5 பேர் படுகாயமுற்றனர். #JeepAccident
இமாசலப்பிரதேசத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி
Published on

சிம்லா:

இமாசலப்பிரதேசம் மாநிலத்தில் இன்று காலை ஜீப் ஒன்று மண்டி மாவட்டத்திற்கு அருகே மலைப்பாங்கான பகுதியில் வந்துக் கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்த ஜீப், பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

பத்தார் பகுதியில் உள்ள மிக ஆழமான பள்ளத்தாக்கு என்பதால் ஜீப் உருண்டு ஆழத்தில் விழுந்தது. இதில் 10 பேர் பயணம் செய்தனர். இவர்களுள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு போலீசார், மீட்புப்படையினருடன் விரைந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த 5 பேரை உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.  அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். #JeepAccident

X

Maalai Malar
www.maalaimalar.com