திருப்பத்தூரில் ஜே.சி.பி.யை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்

திருப்பத்தூரில் ஜே.சி.பி.யை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூரில் ஜே.சி.பி.யை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அடுத்த கதிரிமங்கலம் ஊராட்சி நாசகவுண்ட வட்டம் பகுதியில் சுமார் 100-க்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றனர். அந்த பகுதிக்கு செல்ல திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு துணை கலெக்டர் பங்களா காம்பவுண்ட் ஒட்டி சாலை செல்கிறது, இந்த சாலை வழியில் உள்ள ஒருவர் தனக்கு இந்த வழி சொந்தமான இடம் என்று கூறி இன்று காலை ஜே.சி.பி. மூலம் பள்ளம் தொண்டினார்.

இதனை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஜே.சி.பி.யை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த வட்டாரா வளர்ச்சி அலுவலர் பொதுமக்களிடையே பேச்சுவார்தை நடத்தினார்.

மேலும் அந்த இடத்தை அளக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com