ஜெயங்கொண்டம் அருகே சிறுமி மர்ம மரணம்

ஜெயங்கொண்டம் அருகே பாட்டி வீட்டில் வசித்து வந்த சிறுமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜெயங்கொண்டம் அருகே சிறுமி மர்ம மரணம்
Published on

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார் பாளையத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் அன்னப்பூரணி (வயது13). உடையார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம்வகுப்பு படித்து வந்தாள். தாய் தந்தை இல்லாத நிலையில் தனது பாட்டியுடன் வசித்து வந்தாள். இந்த நிலையில் நேற்று அன்னப்பூரணி வீட்டில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினாள்.

இது குறித்த தகவல் அறிந்ததும் உடையார் பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அன்னப்பூரணி எப்படி இறந்தாள் என்று தெரியவில்லை. 

உறவினர் ஒருவர் அவளை சத்தம் போட்டதாக  கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் அவர்  தூக்குப்போட்டுதற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com