தினகரன் புதிய கட்சியால் எங்களுக்கு கவலை இல்லை- ஜெயக்குமார் பேட்டி

தினகரன் புதிய கட்சியால் எங்களுக்கு கவலை இல்லை என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
தினகரன் புதிய கட்சியால் எங்களுக்கு கவலை இல்லை- ஜெயக்குமார் பேட்டி
Published on

சென்னை:

மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் அவரது இல்லத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இருப்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளில் இருக்கக் கூடிய தீவுகளில் சென்று தங்கி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தகவல் தெரியாமல் கடலுக்கு சென்றுள்ள மீனவர்களுக்கு விமானம் மூலமாக தகவல் வழங்கி வருகிறோம்.

மலை ஏறும் பயிற்சி ஒரு வீர சாகச விளையாட்டு. அதனை தடை செய்ய முடியாது. அதே நேரம் சுற்றுலா மேம்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

குற்றப்பின்னணி கொண்டயாரும் அ.தி.மு.க.வில் கிடையாது. குற்றபின்னணி கொண்டவர்கள் வேட்பாளராக நிறுத்தப்படுவதாக கூறப்படும் கருத்தை மற்ற கட்சிகள் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

தினகரன் மட்டுமல்ல யார் வேண்டு மானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால் அ.தி.மு.க.வின் கட்சி கொடியையும், சின்னத்தையும் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. வழிப்போக்கர்கள் கட்சி தொடங்குவது குறித்து கவலையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ஊடகங்களில் பேசுவதை ஜெயக்குமார் குறைத்து கொள்ள வேண்டும் என்று வைகோ கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு ‘‘வைகோ பிறக்கும் போதே ஒலிப் பெருக்கியுடன் பிறந்தவர். பேசுவதில் வீரசாகசம் செய்பவர்’’ என்று பதிலளித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com