லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவை விசாரிக்க ஜெயலலிதா மரண விசாரணை ஆணையம் முடிவு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகச்சாமி ஆணையம், லண்டன் டாக்டர் ரிச்சர் பீலே, சிங்கப்பூர் டாக்டர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்துள்ளது. #JayaDeathProbe #Jayalalithaa
லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவை விசாரிக்க ஜெயலலிதா மரண விசாரணை ஆணையம் முடிவு
Published on

சென்னை:

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்தது. இந்த கமிஷன் ஜெயலலிதா தொடர்புடைய அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரித்து வருகிறது.

சுமார் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி உள்ள விசாரணை ஆணையத்தில் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ம் தேதி உடன் முடிவடைய உள்ளது. இதனால், விசாரணையை ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது. 

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது லண்டனில் இருந்து வந்து சிகிச்சை அளித்த ரிச்சர்ட் பீலே, சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை டாக்டர்கள் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி வீடியோ கான்பிரன்சிங் முறையில் விசாரிக்க ஆணையம் திட்டமிட்டுள்ளது.

அக்டோபர் முதல் வாரத்தில் இந்த விசாரணை இருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜி.சி கில்னானி, அஞ்சன்டிரிகோ, நிதிஷ் நாயக் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com