ஜம்மு காஷ்மீரில் கண்ணிவெடிக்கு காலை பறிகொடுத்த இந்திய ராணுவ வீரர்

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடி பகுதியில் தீவிரவாதிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கிய இந்திய ராணுவ வீரர் தனது காலை இழந்துள்ளார். #JammuKashmir #Poonchmineexplosion #Jawanlostleg
ஜம்மு காஷ்மீரில் கண்ணிவெடிக்கு காலை பறிகொடுத்த இந்திய ராணுவ வீரர்
Published on

ஜம்மு:

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடி பகுதியில் தீவிரவாதிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கிய இந்திய வீரர் தனது காலை இழந்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்திற்குட்பட்ட காரி கர்மரா செக்டாரில் நேற்று ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு ராணுவ வீரர், எதிர்பாராத விதமாக தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் மிதித்தார்.

இதையடுத்து அந்த கண்ணிவெடி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் தூக்கிவீசப்பட்ட ராணுவ வீரர் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக உத்தம்பூர் ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில், கண்ணிவெடியில் சிக்கியதில் அந்த ராணுவ வீரர் தனது வலது காலை இழந்துவிட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #JammuKashmir #Poonchmineexplosion #Jawanlostleg #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com