ஜவ்வாதுமலையில் 9-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்: 4 சிறுவர்கள் கைது

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் 9-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜவ்வாதுமலையில் 9-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்: 4 சிறுவர்கள் கைது
Published on

போளூர்:

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை சேர்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள மலைவாழ் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார்.

இவரிடம், அதே பகுதியை சேர்ந்த 15 வயதுடைய 4 சிறுவர்கள் கடந்த 9-ந்தேதி நைசாக பேசினர்.

பிறகு மாணவியை ஜமுனாமரத்தூர் முருகன் கோவில் பின்புறத்தில் உள்ள மலை அடிவாரத்திற்கு அந்த 4 சிறுவர்களும் அழைத்துச் சென்றனர்.

அங்கு ஆள் நடமாட்டம் இல்லாததால், சிறுமியை மிரட்டி சிறுவர்கள் 4 பேரும் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இதையடுத்து, யாரிடமும் தங்களை பற்றி கூறக்கூடாது என மாணவியை சிறுவர்கள் மிரட்டினர். வன்கொடுமைக்கு ஆளான மாணவி, பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறினார். இதுப்பற்றி சைல்டு ஹெல்ப்லைனில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, போளூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிந்து 4 சிறுவர்களையும் கைது செய்தனர்.

கைதானவர்களில் ஒரு சிறுவன், அத்திப்பட்டு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com