

டோக்கியோ:
ஜப்பான் நாட்டின் பிரதமராக ஷின்சோ அபே இருந்து வருகிறார். இவருக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படுபவர் டொமோமி இனாடா. இவர் அந்நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரியாக இருந்து வருகிறார்.
இதற்கிடையே, டொமோமி இனாடா மீது அமைதி காப்புப்பணி தொடர்பான முக்கிய ஆவணங்களை மூடி மறைத்தாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், டொமோமி இன்று காலை தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் ஷின்சோ அபேயிடம் அளித்துள்ளார்.
தெற்கு சூடானில் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஐ.நா. அமைதிப்படையின் ஜப்பான் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பதிவுகள் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இரண்டு மாதங்கள் கழித்து குறிப்பிட்ட தகவல்கள் கம்ப்யூட்டரில் இருந்து திட்டமிட்டே அழிக்கப்பட்டதாக ஜப்பானிய அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.