ஐஎஸ்எல் கால்பந்து - ஐதராபாத்தை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர்

ஜார்க்கண்டில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
கோல் அடிக்கும் முயற்சியில் ஜாம்ஷெட்பூர் அணியினர்
கோல் அடிக்கும் முயற்சியில் ஜாம்ஷெட்பூர் அணியினர்
Published on

ராஞ்சி:

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

ஜார்க்கண்டின் ஜே.ஆர்.டி. டாடா ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. ஐதராபாத் எப்.சி. அணிகள் மோதின.

ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் பரூக் சவுத்ரி ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். அதன்பின், முதல் பாதியின் முடிவில் ஐதராபாத் அணியின் மார்செலினோ பெரைரா 45வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

ஆட்டத்தின் 62வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூரின் அன்கிட் ஜாதவ் மீண்டும் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

மேலும், 75வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூரின் 75வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில், ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் எப்.சி. அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com