

பனாஜி:
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
கோவா மாநிலத்தில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா மற்றும் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதின.
ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் செர்ஜியோ கேசில் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.
இதனால் முதல் பாதியின் முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி 1-0 என முன்னிலை வகித்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கோவா அணி வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
இறுதியில், ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் கோவா அணியை வீழ்த்தி மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.