ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜெம்ஷெத்பூர் அணி முதல் வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்று மாலை நடந்த 17-வது லீக் ஆட்டத்தில் ஜெம்ஷெத்பூர் எப்.சி. அணி டெல்லி அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது.
Published on

10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் நேற்று மாலை நடந்த 17-வது லீக் ஆட்டத்தில் ஜெம்ஷெத்பூர் எப்.சி. அணி, டெல்லி டைனமோஸ் எப்.சி. அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் மாறி மாறி கோல் அடிக்க முயற்சித்தனர். இருப்பினும் முதல் பாதி நேரத்தில் கோல் ஏதும் விழவில்லை.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 61-வது நிமிடத்தில் ஜெம்ஷெத்பூர் எப்.சி. வீரர் இசூ அசூகா ஒரு கோல் அடித்தார். மேற்கொண்டு இரு அணியினரும் கோல் அடிக்காததால், அதுவே வெற்றி கோலாக அமைந்தது. முடிவில் ஜெம்ஷெத்பூர் எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் டெல்லியை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்தது. 4-வது லீக்கில் ஆடிய ஜெம்ஷெத்பூர் அணிக்கு இது முதல் வெற்றியாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com