ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் - 5 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் - 5 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழப்பு
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள சாலையில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். திடீரென அங்கு வந்த பயங்கரவாதிகள் அவர்கள் சென்ற வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் கையெறி குண்டுகளை வீசினர்.

இந்த தாக்குதலில் 5 சிஆர்பிஎப் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிஆர்பிஎப் வீரர்கள் பதிலடி தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.

காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் பலியானதை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com