ஜம்மு காஷ்மீர் - சோபியான் பகுதியில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதல்
பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதல்
Published on

ஸ்ரீநகர்:

காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு படையினரை கண்டதும் அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அவர்களது தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் 3  பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.  தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறதுது.

X

Maalai Malar
www.maalaimalar.com