ஜம்மு-காஷ்மீர்: என்கவுன்ட்டரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் ஷோபியான் மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடம்
துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடம்
Published on

ஜம்மு-காஷ்மீரில் மறைந்திருக்கும் பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் உள்ளூர் போலீஸ் உடன் இணைந்து பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று மதியம் ஷோபியான் மாவட்டம் கிலூரா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனால் பாதுகாப்புப்படையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். அப்போது பயங்கரவாதி ஒருவர் சரணடைய வந்தான். அந்த நேரத்தில் நான்கு பயங்கரவாதிகள் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். பதிலுக்கும் வீரர்களும் துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அவர்களிடம் இருந்து இரண்டு ஏ.கே.எஸ். மற்றும் மூன்று துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. 

தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி மேலும் இரண்டு பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com