காஷ்மீரில் உள்ளூர் மக்களுடன் உணவருந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல்

காஷ்மீரில் உள்ள சோபியான் பகுதியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் உள்ளூர் மக்களுடன் இணைந்து பொது இடத்தில் உணவருந்தினார்.
உள்ளூர் மக்களுடன் இணைந்து உணவருந்தும் அஜீத் தோவல்
உள்ளூர் மக்களுடன் இணைந்து உணவருந்தும் அஜீத் தோவல்
Published on

காஷ்மீர்:

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் அம்மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக்கியது. இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது.

இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க காஷ்மீர் பள்ளத்தாக்கின் அனைத்து பகுதியிலும் ராணுவம்  குவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலும் கடந்த சில நாட்களாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுவருகிறார்.

இந்நிலையில் காஷ்மீரில் உள்ள சோபியான் பகுதியில் இன்று அஜீத் தோவல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கிருந்த உள்ளூர்வாசிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், அப்பகுதி மக்களுடன் இணைந்து பொது இடத்தில் தனது மதிய உணவை உண்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com