ஜம்மு காஷ்மீர் - அரசியல் கட்சி பிரமுகர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அரசியல் கட்சி பிரமுகரான மொகமது இஸ்மாயில் வானி மீது பயங்கரவாதிகள் இன்று மாலை திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். #JammuKashmir
ஜம்மு காஷ்மீர் - அரசியல் கட்சி பிரமுகர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் வசித்து வருபவர் மொகமது இஸ்மாயில் வானி. தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்தவர்.

இந்நிலையில், இன்று மாலை இஸ்மாயில் வானியை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த திடீர் தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்தார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்ரீநகர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. #JammuKashmir

X

Maalai Malar
www.maalaimalar.com