ஜம்மு காஷ்மீர் - பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் மரணம்

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாகிஸ்தான் படையினர் நடத்திய அத்துமீறி தாக்குதலில் ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார். #JammuKashmir #KupwaraViolation
ஜம்மு காஷ்மீர் - பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் மரணம்
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள மச்சில் செக்டார் பகுதியில் இந்திய ராணுவ முகாம்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மச்சில் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.

பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறலை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. #JammuKashmir #KupwaraViolation

X

Maalai Malar
www.maalaimalar.com