

திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள கொசவபட்டி புனித உக்கிரியமாதா கோவிலில் ஒவ்வொரு வருடமும் திருவிழா நடைபெற்று வருகிறது. இங்குள்ள புனித அந்தோணியார் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வரும் 8-ந் தேதி தொடங்குகிறது.
அன்று அந்தோணியாரின் அலங்கார தேர் பவனி, வாணவேடிக்கை நடைபெறும். மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மேல் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க மாடு கொண்டு வருபவர்கள் கால்நடை மருத்துவர் சான்றிதழுடன் வரும் 5-ந் தேதி காலை 8 மணி முதல் வந்து டோக்கன் பெற்றுச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மாடு பிடிப்பவர்கள் 6-ந் தேதி காலை 8 மணி முதல் கட்டணம் ரூ.100 செலுத்தி 2 புகைப்படம், அடையாளச் சான்று கொடுத்து பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.வெளியூர் மாடு பிடி வீரர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு வாடிவாசல் மற்றும் பார்வையாளர்கள் கேலரி அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. #tamilnews