ஜலகண்டாபுரம் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

ஜலகண்டாபுரம் அருகே வீட்டின் கதவை உடைத்து 7½ பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு புகுந்து கொள்ளை
வீடு புகுந்து கொள்ளை
Published on

மேச்சேரி:

ஜலகண்டாபுரம் அருகே உள்ள சூரப்பள்ளி ஊராட்சி நொரச்சி வளவு பகுதியை சேர்ந்தவர் வர்ணன் (வயது 38). மெக்கானிக். இவர் சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டார். இவருடைய மனைவி வீட்டை பூட்டி விட்டு, உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் வீட்டுக்குள் பீரோவில் இருந்து 7½ பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து ஜலகண்டாபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டின் கதவை உடைத்து 7½ பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com