புரோ கபடி லீக்: ஜெய்ப்பூர், குஜராத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது

புரோ கபடி லீக் தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், குஜராத் பார்ச்சுன் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது.
ஜெய்ப்பூர் வீரரை மடக்கும் குஜராத் வீரர்கள்
ஜெய்ப்பூர் வீரரை மடக்கும் குஜராத் வீரர்கள்
Published on

ஜெய்ப்பூர்:

7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஜெய்ப்பூரில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், குஜராத் பார்ச்சுன் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.

ஆட்டத்தின் தொடக்கம் இரு அணி வீரர்களும் பொறுப்புடன் ஆடினர். இதனால் ஜெய்ப்பூர் அணி முதல் பாதியின் முடிவில் 15 - 10 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் குஜராத் அணி வீரர்கள் அதிரடியாக ஆடி புள்ளிகளை எடுத்தனர்.

இறுதியில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், குஜராத் பார்ச்சுன் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 28 -28 என்ற புள்ளிக்கணக்கில் சமனில் முடிந்தது.

இதன்மூலம் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 46 புள்ளிகளுடன் 7ம் இடத்தில் உள்ளது. 

ஜெய்ப்பூரில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் யுபி யோத்தா அணி தமிழ் தலைவாஸ் அணியை 42 -22 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது. இந்த வெற்றியால் யுபி யோத்தா புள்ளிப்பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com