புரோ கபடி: லீக் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தியது ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ்

புரோ கபடி லீக் போட்டியில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது. பாட்னா பைரேட்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் இடையேயான போட்டி சமனில் முடிந்தது.
புரோ கபடி: லீக் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தியது ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ்
Published on

ஐந்தாவது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடி வருகின்றன. தற்போது ஜார்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியில் போட்டிகள் நடைபெறுகின்றன.

இன்று நடைபெற்ற 'ஏ' பிரிவு லீக் போட்டியில் தபாங் டெல்லி - ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்தன.

இப்போட்டியில், ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணி 36-25 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. அதன்பின்னர் நடைபெற்ற மற்றொரு 'பீ' பிரிவு லீக் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்தன. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டி 37-37 என்ற புள்ளிக்கணக்கில் சமனில் முடிந்தது.

அதிகபட்சமாக பெங்கால் வாரியஸின் மணிந்தர்சிங் 15 தொடுபுள்ளிகளும், பாட்னாவின் பிரதீப் நர்வால் 13 தொடுபுள்ளிகளும் எடுத்தனர்.

'ஏ' பிரிவு புள்ளிப்பட்டியலில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற ஜெய்ப்பூர் 36 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலும், தோல்வியடைந்த டெல்லி அணி 28 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் நீடிக்கின்றன. 'பீ' பிரிவு புள்ளிப்பட்டியலில் பெங்கால் அணி முதல் இடத்திலும், பாட்னா அணி இரண்டாம் இடத்திலும் உள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com