வாலிபர் மீது தாக்குதல்: சிங்கப்பூரில் இரட்டை சகோதரர்களுக்கு 5 மாதம் ஜெயில்

சிங்கப்பூரில் வாலிபரை தாக்கிய வழக்கில் இரட்டை சகோதரர்களுக்கு 5 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
வாலிபர் மீது தாக்குதல்: சிங்கப்பூரில் இரட்டை சகோதரர்களுக்கு 5 மாதம் ஜெயில்
Published on

சிங்கப்பூர்:

இந்தியாவை சேர்ந்த இரட்டை சகோதரர்கள் லட்சுமணன் (24) மற்றும் ராமன் போத்தியப்பன் (24). இவர்கள் இருவரும் அங்கு தங்கி பணிபுரிந்தனர்.

சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த இவர்கள் இந்தியாவை சேர்ந்த தேவன் வேலாயுதம் (41) என்பவரை அடித்து உதைத்தனர். இவர் ஷா ரோட்டில் உள்ள உறங்கும் விடுதியில் இருந்த போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

அதனால் காயமடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் தொடரப்பட்ட வழக்கில் இரட்டை சகோதரர்களுக்கு 5 மாதம் ஜெயில் தண்டனையும், 3 பிரம்படியும் வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com