கோரிக்கைகளை வலியுறுத்தி 24-ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு

கோரிக்கைகளை வலியுறுத்தி 24-ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் வரும் 24-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.
Published on

சென்னை:

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் வரும் 24-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

அரசு ஊழியர்கள்,  ஆசிரியர்கள் சங்கங்களின் ஒருங்கிணைந்த அமைப்பான ஜாக்டோ - ஜியோ, 7-வது சம்பளக்கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி ஆகஸ்ட் 22-ம் தேதி அடையாள வேலைநிறுத்தம் செய்தனர். அதன்பின் ஆகஸ்ட் 26, 27-ம் தேதிகளில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், புதிய ஊதிய விகிதங்களை அரசு  அறிவித்தது. இதையடுத்து, ஜாக்டோ - ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களின் அவசரக் கூட்டம் சென்னையில் நேற்று மாலை நடந்தது. அதில் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:

ஆகஸ்ட் மாதம் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இடைநிலை, முதுநிலை ஆசிரியர்களுக்கான ஊதியத்தில் உள்ள முரண்பாடுகளை களையவேண்டும்.

இதை வலியுறுத்தி 24-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தாலுகா தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இந்த ஆர்ப்பாட்டத்தில் 12 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 1-ம் தேதி உயர்மட்டக் குழு கூடி ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்து அறிவிக்கும். என்றனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com