தற்காலிக ஆசிரியர் பணிக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மனு

தற்காலிக ஆசிரியர் பணிக்கு மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மனு செய்திருப்பதாக அதிகாரி தெரிவித்தார். #JactoGeo
தற்காலிக ஆசிரியர் பணிக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மனு
Published on

தர்மபுரி:

புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ சார்பில் கடந்த 22-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.

இந்த போராட்டத்தால், நடுநிலை, தொடக்கப் பள்ளிகளில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. முழு ஆண்டு தேர்வு நெருங்கும் வேளையில், மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, அரசு அறிவித்து உள்ளது.

முதலில் அவர்களுக்கு ரூ.7 ஆயிரத்து 500 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு சம்பளம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இன்று மாலை வரை தற்காலிக ஆசிரியர் பணியிடத்துக்கு மனு கொடுக்கலாம் என்று அரசு அறிவித்தது.

இதைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்காக டி.டி.எட். மற்றும் பி.எட்., தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பம் வழங்கி வருகின்றனர்.

நேற்று மாலை வரை 1480 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இன்றும் ஏராளமானோர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு வந்து வேலைகேட்டு மனுக்களை எழுதி கொடுத்தனர். இதேபோல பாலக்கோடு மற்றும் அரூரில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் ஏராளமானோர் மனு கொடுத்து வருகிறார்கள்.

மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மனு செய்திருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று வேலைக்காக காத்திருப்பவர்களும், ஓய்வு பெற்ற ஆசிரியர்களும், முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்களும் வேலை கேட்டு விண்ணப்பம் கொடுத்தனர்.

நாளை (செவ்வாய்க் கிழமை) முதல் அவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com