அரசு ஊழியர்-ஆசிரியர்களுக்கு 4-ந்தேதி சம்பளம் கிடைக்கும்

திருத்தப்பட்ட சம்பள பட்டியல் அனுப்பப்பட்டு அனைத்து ஊழியர்களுக்கும் ஜனவரி மாதத்துக்கான சம்பளம் வருகிற 4-ந்தேதி வழங்கப்பட உள்ளது. #JactoGeo #Teacher #GovernmentEmployees #Salary
அரசு ஊழியர்-ஆசிரியர்களுக்கு 4-ந்தேதி சம்பளம் கிடைக்கும்
Published on

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கீழ் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள்.

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு கருவூலத்துறையில் இருந்து வங்கிகளுக்கு அனுப்பப்பட்ட சம்பளப் பட்டியல் திரும்ப பெறப்பட்டது.

பின்னர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு அவர்கள் வேலைக்கு வராத நாட்களுக்கான சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டு திருத்தப்பட்ட சம்பள பட்டியல் வங்கிகளுக்கு அனுப்பும் பணி தற்போது தொடங்கியுள்ளது.

இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஈடுபடாதவர்கள் என அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் அனைவருக்கும் ஜனவரி மாத சம்பளத்தை நேற்று வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

திருத்தப்பட்ட சம்பள பட்டியல் அனுப்பப்பட்டு அனைத்து ஊழியர்களுக்கும் ஜனவரி மாதத்துக்கான சம்பளம் வருகிற 4-ந்தேதி வழங்கப்பட உள்ளது. #JactoGeo #Teacher #GovernmentEmployees #Salary

X

Maalai Malar
www.maalaimalar.com