பலாப்பழ விற்பனை மந்தம்- விவசாயிகள் வேதனை

பலாப்பழ சீசன் முடிவடைய உள்ள நிலையில் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
விற்பனைக்கு குவிக்கப்பட்ட பலாப்பழங்கள்
விற்பனைக்கு குவிக்கப்பட்ட பலாப்பழங்கள்
Published on

வடகாடு:

வடகாடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான மாங்காடு, புள்ளான்விடுதி, அனவயல், ஆவனம் கைகாட்டி, கொத்தமங்கலம், மறமடக்கி, பனங்குளம், குள மங்கலம், பெரியாளூர், சேந்தன்குடி, கீரமங்கலம், செரியாளூர், கறம்பக்காடு போன்ற ஊர்களில் மா, பலா, வாழை ஆகியவை அதிக அளவில் விளைகின்றன.

பலாப்பழ சீசன் பிப்ரவரி மாதம் தொடங்கி ஜூலை மாதத்தில் குறைய துவங்கும். தற்போது பலாப்பழங்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். கொரோனா ஊரடங்கின் காரணமாக வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து பலாப்பழங்களை வாங்க அதிக அளவில் வியாபாரிகள் வராததால் இந்த ஆண்டு பலாப்பழம் விற்பனை பெரும் பாதிப்புக்குள்ளானது. விலையும் குறைந்துள்ளது.

இருப்பினும் மாவட்டத்திற்குள் மற்றும் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பலாப்பழங்களை வாங்கி செல்கின்றனர். பலாப்பழ சீசன் முடிவடைய உள்ள நிலையில் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனையில் இருந்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com