தேவை 63 ரன்கள், கைவசம் 5 விக்கெட்- இலங்கை வெற்றி பெறுமா?- கடைசி டெஸ்டில் பரபரப்பு

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான கடைசி டெஸ்டில் கைவசம் 5 விக்கெட் மட்டுமே உள்ள நிலையில் இலங்கைக்கு 63 ரனகள் தேவை என்பதால் பரபரப்பை அடைந்துள்ளது. #WIvSL
தேவை 63 ரன்கள், கைவசம் 5 விக்கெட்- இலங்கை வெற்றி பெறுமா?- கடைசி டெஸ்டில் பரபரப்பு
Published on

இலங்கையின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி திணறியது. ஒரு கட்டத்தில் 53 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. அதன்பின் வந்த கேப்டன் ஹோல்டர் 74 ரன்களும், விக்கெட் கீப்பர் டவ்ரிச் 71 ரன்களும் அடித்ததால், 204 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இலங்கை அணி தரப்பில் குமாரா 4 விக்கெட்டும், ரஜிதா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இலங்கையும் ரன்குவிக்க திணறியது. ஜேசன் ஹோல்டர், கேப்ரியலின் அபார பந்து வீச்சால் 154 ரன்னில் சுருண்டது. விக்கெட் கீப்பர் டிக்வெல்லா மட்டும் 42 ரன்கள் சேர்த்தார்.

முதல் இன்னிங்சில் 50 ரன்கள் முன்னிலைப் பெற்ற வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சை தொடங்கியது. இலங்கையின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சீட்டுக்கட்டு போல் விக்கெட் மளமளவென சரிந்தது. இதனால் 31.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் 93 ரன்னில் சுருண்டது.

இதனால் இலங்கையின் வெற்றிக்கு 144 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ். மிகவும் எளிதான ஸ்கோர் என்ற எண்ணத்தில் இலஙகை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.

நேற்றைய 3-வது நாள் கடைசி நேர ஆட்டத்தில் இலங்கை பேட்ஸ்மேன்களால் தாக்குப்பிடித்து விளையாட முடியவில்லை. இதனால் இலங்கை அணியும் விக்கெட்டை இழந்தது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 81 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டை இழந்துள்ளது. பெரேரா 1 ரன்னுடனும், மெண்டிஸ் 25 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com