சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு: பிரதமர் மோடி - இவாங்கா டிரம்ப் சந்திப்பு

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு நடைபெறும் நிலையில், இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் மகள் இவாங்கா டிரம்ப், பிரதமர் மோடியுடன் சந்தித்து பேசினார்.
சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு: பிரதமர் மோடி - இவாங்கா டிரம்ப் சந்திப்பு
Published on

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இந்த மாநாட்டை தொடங்கி வைக்கும் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றுகிறார். இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

அமெரிக்க தொழில் முனைவோர் குழுவுக்கு தலைமை தாங்கி அழைத்து வரும் இவாங்கா, இன்று அதிகாலை இந்தியா வந்தடைந்தார். இந்நிலையில், மாநாடு தொடங்கும் முன்னர் பிரதமர் மோடியுடன் இவாங்கா டிரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

முன்னதாக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் உடன் இவாங்கா சந்தித்து பேசினார். இவாங்கா டிரம்ப், மோடி வருகையை ஒட்டி ஐதராபாத் நகரம் முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com