தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவுக்கு நன்றி: இவாங்கா டிரம்ப் கைப்பட எழுதிய கடிதம்

இவாங்கா டிரம்ப் கடந்த மாதம் ஐதராபாத் வந்தபோது சிறப்பாக அவரை வரவேற்ற தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவுக்கு நன்றி தெரிவித்து தனது கைப்பட எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது.
தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவுக்கு நன்றி: இவாங்கா டிரம்ப் கைப்பட எழுதிய கடிதம்
Published on

இவாங்கா டிரம்ப் கடந்த மாதம் ஐதராபாத் வந்தபோது சிறப்பாக அவரை வரவேற்ற தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவுக்கு நன்றி தெரிவித்து தனது கைப்பட எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது.
 
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நவம்பர் 28-ம் தேதி சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபா் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் பங்கேற்றார்.
 
இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அமெரிக்க தொழில் முனைவோர் குழுவுக்கு இவாங்கா டிரம்ப் தலைமை தாங்கி அழைத்து வந்திருந்தார்.

இந்த மாநாட்டில் 170 நாடுகளில் இருந்து சுமார் 1,500-க்கு மேற்பட்ட தொழில் முனைவோர் கலந்து கொண்டனர். இவாங்கா டிரம்ப் வருகையையொட்டி ஐதராபாத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் மகள் இவாங்கா டிரம்ப் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவுக்கு நன்றி தெரிவித்து தனது கைப்பட எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக இவாங்கா கூறுகையில், இந்திய பயணத்தின் போது சிறப்பாக வரவேற்ற உங்களுக்கு எனது நன்றிகள். பலக்னுமா அரண்மனையில் அளித்த விருந்து என்றும் நினைவில் நிற்கும். எனக்கு வரவேற்பு அளித்த தெலுங்கானா மக்களுக்கு எனது நன்றிகள்.

இவ்வாறு அதில் எழுதியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com