அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எனது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார் - கார்த்தி சிதம்பரம்

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எனது தந்தை ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் என அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்
Published on

சென்னை:

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் டெல்லியில் இன்று இரவு கைது 

செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எனது தந்தை ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் என அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஐ.என்.எக்ஸ் வழக்கில் எதையும் சட்டப்படி சந்திப்போம். எனது தந்தை எங்கும் ஓடி ஒளியவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வழக்கு ஜோடிக்கப்பட்டு எனது தந்தையை கைது செய்துள்ளனர். முழுக்க முழுக்க யாரையோ திருப்திப்படுத்த இது போன்று நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 20 முறை சம்மன் வந்தது, அத்தனை முறையும் ஆஜராகி உள்ளேன், எந்தவித சம்மனும் கிடப்பில் போடப்படவில்லை என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com