டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு புதிய முறையில் டென்னிஸ் வீரர்கள் தேர்வு

டோக்கியோவில் 2020-ம் ஆண்டில் நடைபெறும் ஒலிம்பிக் தொடரில், டென்னிஸ் போட்டிக்கான வீரர்கள் தேர்வில் சில மாற்றங்கள் செய்யப்பட இருக்கிறது. #TokyoOlympics #ITF
டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு புதிய முறையில் டென்னிஸ் வீரர்கள் தேர்வு
Published on

ஜப்பான தலைநகர் டோக்கியோவில் 2020-ல் ஒலிம்பிக் தொடர் நடைபெறுகிறது. இந்த ஒலிம்பிக் தொடருக்கு முன் இதில் கலந்து கொள்ளும் விளையாட்டுக்கள் வரையறுக்கப்படும். சில விளையாட்டுக்களில் மாற்றம் கொண்டுவர விரும்பினால், அந்தந்த சர்வதேச அமைப்புகள் சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகக் கமிட்டியிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

டென்னிஸில் ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய ஐந்து பிரிவுகளில் ஆட்டம் நடைபெறும்.

ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தலா 64 பேர் பங்கேற்பார்கள். இதில் 56 பேர் நேரடியாக ஏற்றுக் கொள்ளப்படுவார்கள். 8 பேர் சர்வதேச டென்னிஸ் பெடரேசன் சார்பில் இடம்பெறுவார்கள். தற்போது புதிதாக 6 பேர் கண்டங்களின் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று சர்வதேச டென்னிஸ் பெடரேசன் தெரிவித்துள்ளது. இதற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன்மூலம் 2018-ம் ஆண்டு ஆசியா போட்டி, 2019 ஆப்பிரிக்கா போட்டி, பான் அமெரிக்கா போட்டியில் (இதில் மட்டும் தோற்றவர்களும்)  வெற்றிபெறும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com