இத்தாலி: மிலன் நகர் அருகே ரெயில் தடம் புரண்டு விபத்து - இருவர் பலி

இத்தாலி நாட்டின் மிலன் நகர் அருகே புறநகர் மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் இரண்டு பயணிகள் உயிரிழந்தனர்.
இத்தாலி: மிலன் நகர் அருகே ரெயில் தடம் புரண்டு விபத்து - இருவர் பலி
Published on

மிலன்:

இத்தாலி நாட்டின் மிலன் நகர்  அருகே புறநகர் மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் இரண்டு பயணிகள் உயிரிழந்தனர்.

ஐரோப்பிய நாடான இத்தாலி நாட்டின் மிலன் நகரில் இருந்து வடக்கு இத்தாலியில் உள்ள க்ரீமோனா பகுதிக்கு பயணிகள் மின்சார ரெயில் சென்று கொண்டிருந்தது. இன்று காலை ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளனது. விபத்து குறித்து தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் இரண்டு பயணிகள் பலியாகியுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com