இத்தாலியில் ரெயில் தடம் புரண்டு 2 பேர் பலி

இத்தாலியில் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் ரெயில் டிரைவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்துக்குள்ளான ரயில்
விபத்துக்குள்ளான ரயில்
Published on

ரோம்:

இத்தாலியின் மிலனில் இருந்து துறைமுக நகரான சலேர்னாவுக்கு பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த ரெயில் மிலன் நகரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள லோடி நகருக்கு அருகே அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போதும் சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென தடம் புரண்டது.

ரெயிலின் என்ஜின் மற்றும் அதன் பின்னால் இருந்த 2 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி, கவிழ்ந்தன.இந்த கோர விபத்தில் ரெயில் டிரைவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தடம் புரண்ட 2 பெட்டிகளில் இருந்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர்.விபத்தை தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்று கவிழ்ந்து கிடந்த ரெயில் என்ஜின் மற்றும் 2 பெட்டிகளை கிரேன் மூலம் தூக்கி நிறுத்தினர். பின்னர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com