

கோத்தகிரி:
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நீலகிரி மாவட்டம், கொடநாட்டில் எஸ்டேட் உள்ளது. இங்கு பிரம்மாண்டமான பங்களாவும் உள்ளது. இந்த எஸ்டேட்டில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகிறார்கள்.
எஸ்டேட் நிர்வாகத்தை மேலாளர் நடராஜன் என்பவர் நிர்வகித்து வந்தார். வருமான வரித்துறை அதிகாரிகள் எஸ்டேட் முழுவதும் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள்.
முக்கிய ஆவணங்கள் ஏதாவது மறைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்று ஆய்வு நடத்தி வருகிறார்கள். எஸ்டேட்டை சுற்றியும் 12 நுழைவு வாயில்கள் இருப்பதால் அதிகாரிகள், ஊழியர்களை தவிர வேறு யாரும் உள்ளே செல்ல முடியவில்லை.
வருமான வரித்துறை அதிகாரிகள் மட்டும் அவ்வப்போது சோதனை முடித்து விட்டு வெளியே போவதும், உள்ளே வருவதுமாக இருந்தனர். இதனால் கொடநாட்டில் சோதனை தொடர்கிறது என்ற தகவல் மட்டுமே வெளியாகி உள்ளது.
அங்கு என்ன கைப்பற்றப்பட்டது? போன்ற விவரங்கள் தெரியவில்லை. இன்று காலை 7 மணிக்கு உள்ளே சென்ற அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.
நுழைவு வாயில்கள் முன்பு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.