கிறிஸ்டி நிறுவனத்தில் 3வது நாளாக ஆய்வு - ஊழியர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை

கிறிஸ்டி நிறுவனத்தில் இன்று 3வது நாளாக ஆய்வு செய்த வருமான வரித்துறை அதிகாரிகள் பணியில் இருந்த அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
கிறிஸ்டி நிறுவனத்தில் 3வது நாளாக ஆய்வு - ஊழியர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை
Published on

திருச்செங்கோடு:

தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு தேவையான முட்டைகளை அனுப்பும் பணி மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு சத்துமாவு வினியோகம் செய்யும் பணியை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே ஆண்டிப்பாளையத்தில் உள்ள கிறிஸ்டி நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகிறது.

இந்த நிறுவனம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின்பேரில் கடந்த மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் நாமக்கல், திருச்செங்கோடு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இந்த நிறுவன அலுவலகம், குடோன் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனை 5 நாட்களாக நடைபெற்றது. அப்போது பல கோடி ரூபாய் ரொக்கம், தங்கம், முக்கிய ஆவணங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் திருச்செங்கோடு கிறிஸ்டி நிறுவனத்தில் கடந்த 2 நாட்களாக மீண்டும் ஆய்வு செய்தனர்.

நேற்று 3-வது நாளாக இந்த நிறுவனத்தில் ஆவணங்களை தொடர்ந்து ஆய்வு செய்த வருமான வரித்துறை அதிகாரிகள், பணியில் இருந்த அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தியதோடு, ஏற்கனவே இந்த நிறுவனத்தில் கைப்பற்றப்பட்டு அறையில் பூட்டி சீல் வைத்திருந்த ஆவணங்களை மறு ஆய்வு செய்ததாகவும் தெரிகிறது. தொடர்ந்து ஆய்வு நடந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com