ஜெர்சியுடன் பெயர், நம்பர் காமெடியா இருக்கு... -பிரெட் லீ

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முதன்முறையாக ஜெர்சியில் வீரர்களின் நம்பர், பெயர் இருக்கும் முறை கொண்டு வரப்பட்டது. இது குறித்து பிரெட் லீ கருத்து தெரிவித்துள்ளார்.
ஆஷஸ் தொடரில் வீரர்கள்
ஆஷஸ் தொடரில் வீரர்கள்
Published on

கிரிக்கெட் ரசிகர்களால் உலக கோப்பை கொண்டாடப்படுவதை போலவே, ஆஷஸ் தொடரும்  பரவலாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி கடந்த 1ம்தேதி தொடங்கியது.

முதல் போட்டியில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த தொடரில் வரலாற்றிலேயே முதன்முறையாக ஜெர்சியில் வீரர்களின் பெயர்கள், எண்கள் இணைக்கப்பட்டிருந்தது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது டுவிட்டர் பக்கத்தில் அந்நாட்டு அணியின் ஆஷிஸ் தொடர் கேப்டன் ரூட்டின் புகைப்படத்துடன் வெளியிட்டது. இதற்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆதம் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இது கேலிக்கூத்தாக இருக்கிறது. ஐசிசியின் ஒவ்வொரு மாற்றத்தையும் வரவேற்கிறேன். ஆனால், இந்த முறை மிகவும் தவறான ஒன்றுதான்’ என பதிவிட்டுள்ளார். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com