சிரியா: ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து அல்-மயாடீன் நகரம் மீட்பு

சிரியா நாட்டின் கிழக்கு பகுதியில் ஈராக் எல்லையோரத்தில் உள்ள அல்-மயாடீன் நகரத்தை ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மீட்டுள்ளதாக கூட்டுப் படைகள் தெரிவித்துள்ளது.
சிரியா: ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து அல்-மயாடீன் நகரம் மீட்பு
Published on

டமாஸ்கஸ்:

சிரியா நாட்டில் ரக்கா நகரில் இருந்து அடித்து விரட்டப்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் கடைசி நகரமான மயாடீன் நகரை கைப்பற்ற அமெரிக்காவின் ஆதரவுடன் அந்நாட்டின் அரசுப் படைகள் உச்சகட்ட தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுக்கு துணையாக ரஷியா நாட்டின் போர் விமானங்களும் வான்வழி தாக்குதலை நடத்தியது.

இந்நிலையில், ஈராக் நாட்டின் எல்லையோர நகரமான டேய்ர் அல் ஸோர் மாகாணத்தின் அருகேயுள்ள மயாடீன் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மீட்டுள்ளதாக கூட்டுப் படைகளின் செய்தி தொடர்பாளர் ரியான் டில்லர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com